எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது: இடஒதுக்கீட்டு விவரம் பிப்.15-ம் தேதி வெளியாகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம்27-ம் தேதி தொடங்கியது. சென்னைஅண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், தொடர்ந்து அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர்.

முதல்முறையாக ஆன்லைனில்

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு கல்லூரிகளின் 3,995 எம்பிபிஎஸ் இடங்கள், 157 பிடிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,390 எம்பிபிஎஸ் இடங்கள், 1,166 பிடிஎஸ் இடங்களுக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 1 முதல் 10,456 பேரில் (நீட் மதிப்பெண் - 710 முதல்410 வரை) 9,894 பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு நேற்று காலை 8 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத் துறைஇணையதளங்களில் தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். வரும் 5-ம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். வரும் 7-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8-ம் தேதிமுதல் 10-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 15-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து 16-ம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 17-ம் தேதி முதல் 22-ம் தேதி பிற்பகல் 3மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிந்ததும், தனியார் கல்லூரிகளின்நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து காலியாகவுள்ள இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப் படவுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்