சென்னை: சென்னை தீவுத்திடலில் நடப்பாண்டு பொருட்காட்சி நடத்த சாத்தியமில்லை என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் டிசம்பர் மாத இறுதியில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கும்.
சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இடம்பெறும். இதனால், ஏராளமானோர் பொருட்காட்சிக்கு வருவார்கள்.
உணவகங்கள், சிறுவர் ரயில், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுவதால் சென்னை மட்டுமின்றி, புறநகர்ப் பகுதி மக்களும் பொருட்காட்சியைக் காண அதிகம் வருவார்கள்.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள் குறித்த அரங்குகளும் பொருட்காட்சியில் முக்கிய இடம்பெறும். 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற பொருட்காட்சிக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாகத் தீவுத்திடலில் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொருட்காட்சி நடத்தப்படவில்லை.
இதற்கிடையே, தீவுத்திடலில் ஜனவரி மாதம் முதல் 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த சுற்றுலாத் துறை முடிவு செய்தது. அதற்காக ரூ.1.26 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமானதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து, தீவுத்திடல் பொருட்காட்சி தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நடப்பாண்டு தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பு அதிகரித்ததால், பொருட்காட்சியை நடத்த முடியவில்லை. தற்போது, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், பொருட்காட்சி, கலை விழாக்கள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை.
இன்னும் ஓரிரு மாதங்களில் அரசு அனுமதி வழங்கி, பொருட்காட்சி அமைத்தாலும், பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராது. எனவே, நடப்பாண்டில் தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்த சாத்தியம் இல்லை” என்றனர்.
பள்ளி, கல்லூரிகள் தற்போது, திறக்கப்பட்டாலும், பொருட்காட்சி, கலை விழாக்கள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago