புதுச்சேரி தமிழ்ச் சங்கத்துக்கு லட்சக்கணக்கில் வாடகை பாக்கி வைத்துள்ளாரா பாஜக எம்எல்ஏ?- குற்றம்சாட்டும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி தமிழ்ச்சங்க கட்டிடத்தில் எம்எல்ஏ அலுவலகத்தை வைத்துள்ள பாஜக எம்எல்ஏ பல லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதுடன், கூடுதலான இடத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக தமிழ்ச்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜான் குமார். கடந்த 2016-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்நெல்லித்தோப்பு தொகுதியில் வென்று எம்எல்ஏவானார். தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக தேர்வான நாராயணசாமி போட்டியிட தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர் காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸில் நின்று வென்று எம்எல்ஏவானார். அப்போதுதமிழ்ச்சங்க வளாகத்தில் முதல்தளத்தில் தனது அலுவலகத்தை அமைத்தார். இந்நிலையில் கடந் தாண்டு காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் தனது மகன் ரிச்சர்டுடன் ஜான்குமார் இணைந்தார். காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமாரும், நெல்லித்தோப்பில் ரிச்சர்டும் பாஜகவில் போட்டியிட்டு வென்றனர். பாஜகவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. தற்போது முதல்வரின் நாடாளுமன்றச்செயலராக உள்ளார்.

இதற்கிடையே காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் வைத்துள்ள இடத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக ஜான்குமார் வாடகை செலுத்தவில்லை என்று தமிழ்ச்சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபற்றி புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தலைவர் முத்துவிடம் கேட்டதற்கு, "எம்எல்ஏ அலுவலகம் வைக்க தமிழ்ச்சங்க வளாகத்தில் முதல் தளத்தில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு இடம் அளித்தோம்.

ரூ. 20 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. அவரிடம் பலமுறை வாடகை கேட்டும் தருவதாகக்கூறி விட்டு இதுவரை தரவில்லை. பல லட்சம் பாக்கி வைத்துள்ளார். இதுவரை ரூ. 50 ஆயிரம் மட்டுமே தந்தார். முதல் தளத்தை மட்டுமே வாடகை விட்டோம். எங்கள் அனுமதி இல்லாமல் கீழ்தளத்தையும் ஆக்கிரமித்துள்ளார். விரைவில் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சி மன்றக்குழு கூடி இதுபற்றி முடிவு எடுக்கும். " என்று குறிப்பிட்டார்.

‘அரசுதான் வாடகையை நிறுத்தி வைத்துள்ளது’ - எம்எல்ஏ விளக்கம்

பாஜக எம்எல்ஏ ஜான்குமாரிடம் இதுபற்றி கேட்டதற்கு, "தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் முதல் தளத்தில் எம்எல்ஏ அலுவலகம் அமைத்துள்ளேன். எம்எல்ஏ அலுவலக வாடகையை அரசுதான் தருவது வழக்கம். எந்த தனிப்பட்ட எம்எல்ஏவும் வாடகை தருவதில்லை. அதன்படி ரூ. 20 ஆயிரம் வாடகை என்று நிர்ணயித்து அரசு தரப்புக்கு தெரிவித்துள்ளேன். இக்கட்டிடத்தில், ரூ. 1.25 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். ரூ. 50 ஆயிரம் வரை தனியாக தமிழ்ச்சங்கத்திடம் ரொக்கமும் தந்துள்ளேன்.

அரசு வாடகை தருவதை நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு நான் காரணமல்ல. தமிழ்ச்சங்க கட்டிடத்தில், கடந்த 2002ல் பொது நூலக பயன்பாட்டுக்காக எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 20 லட்சம் அளித்து, இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரசு செலவழித்து கட்டிய கட்டிடத்துக்கு அரசே வாடகை தரக்கூடாது என்று அவர்கள் தரப்பில் இருந்துதான் மனு அளித்துள்ளனர்.

அதனால் இவ்விஷயத்தில் அரசு தரப்புதான் முடிவு எடுக்க வேண்டும். வாடகை பாக்கிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கூடுதலாக எந்த இடத்தையும் நான் ஆக்கிரமிக்கவில்லை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்