வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங் கப்படாமல் திடீரென பணியில் இருந்து நீக்கியதால் பாதிக்கப்பட்ட அம்மா மினி கிளீனிக் பல்நோக்கு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பி-பிளாக் வளாகத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளா கத்தின் முன்பாக அம்மா மினி கிளீனிக்கில் பணியாற்றிய பல் நோக்கு பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர். தங் களுக்கு 5 மாதங்கள் சம்பளம் வழங்கவில்லை என்றும், இனி மேல் பணிக்கு வரக்கூடாது என கூறியதால் தங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கூறி முழக்கமிட்டனர்.
இந்த தகவலறிந்த சத்துவாச் சாரி காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தார்.
பின்னர், அவர்களில் சிலரை மட்டும் துணை இயக்குநர் அலு வலகத்துக்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தார். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக தர்ணாவில் ஈடுபட்ட பல்நோக்கு பணியாளர்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட் டத்தில் கடந்த ஆண்டு 34 அம்மா மினி கிளீனிக்குகளில் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 34 பேர் நியமிக்கப்பட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அம்மா மினி கிளீனிக்குகள் மூடப்பட்டதால் எங்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தினர். எங்களுக்கு வரும் மார்ச் மாதம் வரை பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், இன்று (ஜன.31) எங்களை இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என கூறிவிட்டனர். எங்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், எங்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
இதுகுறித்து நடந்த பேச்சு வார்த்தையில் விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago