தஞ்சை மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாணவி தற்கொலை தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.

ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறும்படி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதை வலியுறுத்தி பாஜகவினர், இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் என பலரும் ஆஜராகி உள்ளனர்.


விசாரணைக்காக வந்துள்ள மைக்கேல்பட்டி கிராம மக்கள்

மேலும், ஆணையத்தினரிடம் மைக்கேல்பட்டி கிராம மக்களும், பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளும் விளக்கம் அளிப்பதற்காக வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்