திருவாரூரில் திமுக தலைவர் மு.கருணாநிதி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி, ஒரு சவுக்கு மரத்தில் வேப்பிலை கட்டி பந்தல்கால் நடப்பட்டது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2-வது முறையாக திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட உள்ளார். இதற்காக நாளை (ஏப்ரல் 24) இரவு திருவாரூர் வந்து சன்னதி தெருவில் உள்ள தன் அக்காவின் இல்லத்தில் தங்குகிறார்.
மறுநாள் (ஏப்ரல் 25) காலை, தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கருணாநிதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடை பெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் கிழக்கு நோக்கி பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மேடை அமைக்கும் பணிக்காக நேற்று காலை பந்தல்கால் நடப்பட்டது. இதற்காக ஒரு சவுக்கு மரத்தின் உச்சியில் வேப்பிலைக் கொத்து ஒன்றைக் கட்டி, அதன்பின் பந்தல்கால் நடப்பட்டதாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago