நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு ஆட்டோ சின்னத்தை கேட்டுப் பெற வேண்டும் என்று நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் விஜய் ரசிகர் மன்றத்தினர் போட்டியிட உள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீலாங்கரை அருகே உள்ள பனையூர் பங்களாவில் நடைபெற்றது. விஜய் ரசிகர் மன்ற மாநில பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர்.
இவர்களிடம் மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெற்றது. வரும்நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆட்டோ சின்னத்தை கேட்டுக் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago