ஆரணி அருகே வாகன தணிக்கையில் 140 காமாட்சி அம்மன் விளக்குகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஆரணி அருகே உரிய ஆவ ணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப் பட்ட 140 காமாட்சி அம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமரேசன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக மூட்டையுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில் அவர், திருவண்ணா மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் ராஜா(47) என்பதும், அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த மூட்டையில் 140 காமாட்சி அம்மன் விளக்குகள் (பித்தளை) இருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆரணியில் பகுதியில் உள்ள பாத்திர கடைகளுக்கு காமாட்சி அம்மன் விளக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித் துள்ளார்.

அதேநேரத்தில் அவரிடம் காமாட்சி அம்மன் விளக்குகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, ராஜாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள காமாட்சி அம்மன் விளக்குகளை பறிமுதல் செய்து, ஆரணி நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்செல்வியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்