சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கை ரத்து செய்திருப்பதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.
வார நாட்களில் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) காலை 5.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பயணிகள் அனைவரும் மெட்ரோ ரயில்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்ய வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago