விழுப்புரம்: தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும் ஆனால் 1, 3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுக ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1-ல் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா இல்லை நேரடித் தேர்வுகள் நடைபெறுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
தமிழகத்தில் பிப்ரவரி 1-ல் இருந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1, 3 மற்றும் 5வது செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைனிலேயே நடைபெறும் ஆகையால் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனிலேயே தேர்வு எழுதலாம்.
» 2030-க்குள் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு
» தமிழகத்தில் பிப்.1 முதல் நீட்டிக்கப்படும் கரோனா கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்
ஆனால், மற்ற நாட்களில் மானவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். கல்லூரிகள் திறப்பு என்பதை மாணவர்கள் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும். எங்காவது வடமாநிலங்களில் தமிழ் மொழியையோ அல்லது வேறு தென் மாநில மொழியையோ மாணவர்களுக்கு கட்டாயமாகப் போதிக்கின்றனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி இதைப் பற்றி புரியாமல் பேசுகிறார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே நடைமுறையில் இருக்கும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பிப்ரவரி 1-ல் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த வாரம் ஞாயிறு ஊரடங்கு இல்லை என்றும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago