காஞ்சியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகள் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சி மாநகராட்சியின் திருக்காலிமேடு பகுதியில் உள்ள இந்திரன்தீர்த்தக் குளம் உட்பட முக்கிய குளங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து வருவாய்த் துறை சார்பில் கணக்கெடுப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய தீர்த்தக் குளங்கள், நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் குளங்கள், கரைகள் மற்றும்குளங்களின் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதில், திருக்காலிமேடு பகுதியில் உள்ள வண்ணாங்குளம், ரெட்டேரி, சின்ன வேப்பங்குளம் மற்றும் இந்திரன் தீர்த்தக் குளம் ஆகியவற்றை முழுமையாக ஆக்கிரமிக்கும் வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில், சாபவிமோசனம் பெறுவதற்காக இந்திரன் நீராடி வணங்கிய சத்யநாதஸ்வாமி கோயிலின் எதிரே அமைந்துள்ள இந்திரன் தீர்த்தக் குளம், புண்ணிய தீர்த்தக் குளமாக விளங்கியுள்ளது. ஆனால், நாளடைவில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 24-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன்பேரில், வருவாய்த் துறை சார்பில் நில அளவையர்கள் மூலம் சர்வே எண் 115-ல் உள்ள இந்திரன் தீர்த்தக் குளம், கரைகள் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் குறித்து வருவாய்த் துறை பணியாளர்கள், கணக்கெடுப்பு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த குளத்தின் நிலை, அப்போது இருந்த குடியிருப்புகள் மற்றும் தற்போது ஆக்கிரமிப்பாளர்களே குடியிருப்பில் வசிக்கின்றனரா அல்லது வாடகை மற்றும் விற்பனையாக பெற்று வேறுநபர்கள் வசிக்கின்றனரா என்பனஉள்ளிட்ட விவரங்கள் குறித்துவிசாரித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், காலியாக உள்ள பகுதிகள் மற்றும் ஆட்கள் யாரும் வசிக்காத குடியிருப்புகள் இருப்பதும் தெரிய வந்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்