100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு அட்டை அணிந்து பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள்

By க.ராதாகிருஷ்ணன்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வருவாய் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நேற்று முதல் விழிப்புணர்வு அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், கல்லூரி மாணவ, மாணவிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வலியுறுத்தி, திருமண அழைப்பிதழ் மாதிரியில் விளம்பரப் பதாகைகள் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒருபகுதியாக, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பணியாற்றும் வருவாய்த் துறை மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நேற்று முதல் விழிப்புணர்வு அட்டைகளை அணிந்து பணியாற்றி வருகின்றனர். அந்த விழிப்புணர்வு அட்டையில், “வாக்களிப்போம் 100 சதவீதம் கண்ணியமாக” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கரூர் தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான ஜெ.பாலசுப்பிரமணியமிடம் கேட்டபோது, “100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய்த் துறை மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல, வாக்குச்சாவடி அலுவலர்கள் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் விழிப்புணர்வு வாசகம் அச்சிட்ட அட்டைகளை அணிந்து ஏப்ரல் 11-ம் தேதி முதல் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முடியும் வரை அவர்கள் இவ்வாறு பணியாற்றுவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்