வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. அவை, அருகில் உள்ள நீர்நிலைகளில் இளைப்பாற வசதியாக மரக்கன்றுகள் நட வனத்துறை திட்டமிட்டுள்ளது. சுமார் 1.25 லட்சம் பார்வையாளர்கள் பறவைகளை கண்டு ரசித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆங்கிலேயே அரசு 1798-ம் ஆண்டு இந்த இடத்தை அடையாளம் கண்டது. 1858-ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மேம்படுத்தப்பட்டது. மெட்ராஸ் வனச்சட்டப்படி பாதுகாக்கப்பட்டு பின்னர், 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு, கடந்த 1988-ம் ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு நிலவும் இதமான தட்ப வெப்பம் காரணமாக ஆண்டு தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருகின் றன. பின்னர், குஞ்சுகளுடன் தாய் நாட்டுக்கு திரும்புகின்றன.
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஏரியில் நீர் இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் வேடந்தாங்கல் ஏரி நிரம்பி பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், மரக் கிளை களில் கூடு கட்டி குஞ்சு பொரித்துள் ளன. இதனால், 20 ஆயிரம் குஞ்சுகள் மரக் கிளைகளில் தாய் பறவைகளுடன் தங்கியுள்ளன.
ஏரி முழுவதுமே பறவைகளால் நிரம்பிக் காணப்படுகிறது. இந்தப் பறவைகள், ஏரியின் அருகில் உள்ள குட்டை மற்றும் சிறிய நீர்நிலைகளில் இளைப்பாறுகின்றன. வரும் காலங் களில் பறவைகள் இளைப்பாற வசதியாக, குட்டை மற்றும் சிறிய நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வன உயிரினக் காப்பகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, வேடந்தாங்கல் சர ணாலய வட்டாரங்கள் கூறியதாவது: சைபீரியா, பாகிஸ்தான், நைஜீரியா, ஆப்கானிஸ்தான் போன்ற வெளி நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன. இவை, சரணாலய ஏரியில் நீர் இருந்தும் அதனருகே உள்ள குட்டைகள், ஏரிகள் மற்றும் சிறிய நீர்நிலைகளில் இறங்கி இளைப்பாறுகின்றன.
ஆனால், அப்பகுதிகள் மரங்கள் இன்றி திறந்தவெளியாக உள்ள தால், பறவைகளுக்கு அச்சம் ஏற் படுகிறது. எனவே, அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், வரும் காலங்களில் பறவைகள் சுதந்திரமாக இளைப்பாற முடியும்.
பறவைகள் அதிகமாக தங்கியுள்ளதால், அவற்றை கண்டு ரசிக்க இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரும், 1,050 வெளி நாட்டினரும் வந்துள்ளனர். பள்ளி விடுமுறையில் இது மேலும் அதி கரிக்கக்கூடும்.
எனவே அடிப்படை வசதிகளை அதிகரித்து வருகி றோம். பறவைகளைக் கண்டு ரசிக்க தொலைநோக்கு கருவி அமைத் துள்ளோம் என்று அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago