காங்கிரஸுக்கான தொகுதிப் பட்டியலில் உள்ள காரைக்குடிக்கு யார் வேட்பாளர் என்பதில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
தங்களுக்குச் செல்வாக்கான காரைக்குடியை 1991-க்குப் பிறகு தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தமாகா கட்சிகளுக்கே ஒதுக்கி வருகிறது திமுக. இதற்குக் காரணம் ப.சிதம்பரம். தனது விசுவாசிகள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே காரைக்குடியை விடாப்பிடியாக கேட்டு வாங்கிவிடும் சிதம்பரம், இந்தமுறை காரைக்குடிக் காக அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். எனினும், இளங்கோவன் தனது கோட்டாவில் காரைக்குடியை தேர்வு செய்திருப்பதுதான் காங்கிரஸ் வட்டாரத்தை வியப்படைய வைத்திருக் கிறது.
கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய கே.ஆர்.ராமசாமியும் அவரது மகன் கரு.மாணிக்கமும் காரைக்குடிக் காக விருப்ப மனு அளித்திருந்தும் நேர்காணலுக்கு வரவில்லை. இந்த நிலையில், சிதம்பரம் அணிக்கு செக் வைப்பதற்காக அவரது எதிரணியைச் சேர்ந்த ஒருவரை இளங்கோவன் இங்கே தயார்படுத்தி வைத்திருக்கிறார்.
மற்ற அணிகளுக்குத் தெரியாமல் அந்தப் பிரமுகரிடம் விருப்ப மனு பெறப்பட்டு நேர்காணலும் நடத்தப்பட்டிருக்கிறது. விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் என்பதில் இளங்கோவன் உறுதியாக நின்றால் இவர் மட்டுமே வேட்பாள ருக்குத் தகுதியானவர். இதனிடையே, சிவகங்கை தொகுதிக் காக தனது மகன் ஜெயசிம்மாவுக்கு விருப்ப மனு கொடுத்திருந்த சுதர்சன நாச்சியப்பன் எம்.பி-யும் (இவரது பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிகிறது) சிவகங்கைக்குப் பதிலாக காரைக் குடியில், தானே போட்டியிடுவதற்கு ஆதரவாளர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சிதம்பரத்தின் சொந்தத் தொகுதி என்பதால் கார்த்தி சிதம்பரம் இங்கு போட்டியிடக்கூடும் என்ற பேச்சும் இருந்தது. ஏற்கெனவே இது தொடர்பாக நாம் அவரைத் தொடர்பு கொண்ட போது, ’’கூட்டணி இல்லாத போதே போட்டியிட்டவன் நான் கூட்டணி இருக்கும் போது போட்டியிடக் கூடாதா என்ன? தொகுதிப் பங்கீடு முடிவா கட்டும் அப்புறம் பேசுகிறேன்’’ என்று சொன்னார். நேற்று மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது, ’’யார் போட்டி யிட வேண்டும் என் பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்’’ என்று மட்டும் சொன்னார்.
இது தொடர்பாக சிதம்பரத்தின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ‘‘எங்களுக்கு 8 தொகுதிகள் கேட்டதில் 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. வேளச்சேரி, திருமயம், சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் கார்த்தி போட்டியிடமாட்டார். கே.ஆர்.ராமசாமியைத் தவிர வேறு யாருக்கும் இளங்கோவனால் காரைக்குடி தொகுதியை ஒதுக்க முடியாது’’ என்று சொன்னார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago