2021 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ”அவ்வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார் , பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர் , சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ், தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன், உமறுப்புலவர் விருது - நா. மம்மது , கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன், கம்பர் விருது - பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம் , மறைமலையடிகள் விருது - சுகி.சிவம் , இளங்கோவடிகள் விருது- நெல்லைக் கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது - . ஞான. அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago