இந்தி திணிப்புக்கு எதிரான நமது போராட்டங்கள் தொடர்கின்றன: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "இந்தி திணிப்புக்கு எதிரான நமது போராட்டங்கள் தொடர்கின்றன" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாய்மொழியாம் தமிழை அழிக்கும் நோக்குடன் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து பல கட்டங்களில் போராடி உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நாள் இன்று. அவர்களின் தியாகங்களை இந்த நாளில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் போற்ற வேண்டும்.

அன்னை மொழியைக் காக்கும் போராட்டத்தில் சிறைபட்டு,வாட்டி வதைத்த நோய்க்கு மருத்துவம் பெறாமலும், தங்கள் உடலை தாங்களே ’தீ’க்கு பலி கொடுத்தும் மொழிப்போர் வீரர்கள் செய்த தியாகங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எந்த நாளிலும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கு எதிரான நமது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அன்னைத் தமிழைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய நாம் உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்