ஏற்காடு ஏரியில் ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரை ரூ.15 லட்சம் செலவில் அகற்றப்பட்டன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஏற்காட்டில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பாதிக்கும் மேல் உள்ள பரப்பளவில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்திருந்தது. மேலும், ஆகாயத்தாமரைகளுடன் குப்பை கழிவுகளும் சேர்ந்து ஏரி நீர் மாசு ஏற்பட்டது. இதனால், ஏரியில் படகு சவாரி செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, சுற்றுலாத் துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஏரியில்படர்ந்திருந்த ஆகாயத்தாமரை பொக்லைன் இயந்திரத்தின் மூலமும் நீரில் மிதக்கும் டிரெட்ஜர்இயந்திரம் மூலமும் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றப் பட்டன.
இதனால், ஏரியில் இடையூறுகள் இன்றி படகு சவாரி செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago