ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு லட்சம் பேர் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் தட்டிக் கழிப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டம் தொடங்கினாலும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் 100% சதவீதம் எட்ட முடியாத நிலை உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பலரும் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஓரளவுக்கு திருப்தியாக இருந்தாலும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. குறித்த காலத்தில் இரண்டா வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தட்டிக்கழித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 12 லட்சத்து 48 ஆயிரத்து 100-ஆக உள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 12 லட்சத்து 18 ஆயிரத்து 960 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 7 லட்சத்து 87 ஆயிரத்து 123 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 700 பேரில் முதல் டோஸ் தடுப்பூசியை 7 லட்சத்து 51 ஆயிரத்து 534 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 54 ஆயிரத்து 653 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 200 பேரில் முதல் டோஸ் தடுப்பூசியை 7 லட்சத்து 28 ஆயிரத்து 409 பேரும், இரண் டாவது டோஸ் தடுப்பூசியை 4 லட்சத்து 72 ஆயிரத்து 105 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறிப்பிடும்படி யான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 72 ஆயிரம் மாணவர்களில் 50 ஆயிரம் பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 54 ஆயிரம் மாணவர்களில் 34 ஆயிரம் பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 55 ஆயிரம் மாணவர்களில் 36 ஆயிரம் பேருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் இரண் டாவது டோஸ் தடுப்பூசியை குறித்த காலத்தில் செலுத்திக்கொள்ள ஆர்வம் கட்டாமல் உள்ளனர். பணிச் சூழல், உடல் உபாதைகள் என பல்வேறு காரணங்கள் கூறினாலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குறுஞ்செய்திகள், வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்.
சிறப்பு முகாம்கள்
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘மாவட்ட அளவில் நாள்தோறும், வாரத்தின் இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில், இரண் டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாக உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் கரோனா தொற்று ஏற்பட் டாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதை அனை வரும் புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளி யில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தொற்று அபாயத்தில் இருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காத்துக் கொள்ளலாம்.
அதேபோல், 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தியதால் ஓரளவுக்கு இலக்கு எட்டப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago