கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை செட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

மேலும், லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட இதர விலையில்லா பொருட்களையும் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவு றுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், 2013-14-ம் கல்வி ஆண்டில் வழங் கப்பட்ட இலவச பஸ் பாஸ் அட்டையை ஆகஸ்ட் மாதம் வரை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள லாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்