ஒமைக்ரானை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக தொற்று தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை எற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் ஐரோப்பா தற்போது கரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
» புறக்கணிக்கப்பட்ட தியாகிகளுக்கு மரியாதை: முதல்வர் அறிவிப்புக்கு தமிமுன் அன்சாரி வரவேற்பு
» சர்வதேச விமானங்களுக்கு தடை; பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago