சென்னை: தமிழ்நாடு பொம்மைகள் தரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி சென்னை பீனிக்ஸ் மாலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொம்மைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக பிஐஎஸ் (BIS) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS ), சென்னை கிளை - 1 இன் அதிகாரிகள் குழுவினர் 17 ஜனவரி 2022 அன்று சந்தேகத்தின் அடிப்படையில், M/s Pheonix Mall, No 142, வேளச்சேரி ரோடு, இந்திரா காந்தி நகர், வேளச்சேரி, சென்னை - 600042 என்ற முகவரியில் உள்ள பொம்மைக் கடையில் தமிழ்நாடு பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020-ஐ மீறியதற்காக அமலாக்கத் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020 மத்திய அரசால் (வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை) குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2020 பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. சில இந்திய தரநிலைகளின் கீழ், BIS (இணக்க மதிப்பீடு) விதிமுறைகள், 2018இன் திட்டம்-I இன் படி, பணியகத்தின் உரிமத்தின் கீழ் தரநிலை முத்திரையைக் கொண்டிருக்கும். பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) திருத்த ஆணை, 2020 செப்டம்பர் 15, 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு ஜனவரி 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.
BIS மேற்கொண்ட இந்த சோதனையின்போது , சுமார் 630 எண்ணிக்கையிலான பொம்மைகள் (தோராயமாக ருபாய் 10 லட்சம் மதிப்பு), மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத பொம்மைகள், ட்ரோன்கள், லெகோஸ் போன்ற BIS ஸ்டாண்டர்ட் மார்க் இல்லாமல் விற்பனைக்கு இருந்தது தெரியவந்துள்ளது. பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020 மற்றும் பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 17(1)(ஏ) ஆகியவற்றை மீறுவதால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
» கிரிமினல் வழக்குகள் உள்ள 25 வேட்பாளர்கள் தேர்வு ஏன்?-பாஜக விளக்கம்
» கரோனா பரவல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதிக்கு மாற்றம்
BIS SRO, CNBO-1, சென்னை ஆல் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ருபாய் 2,00,000/-அபராதம் விதிக்கப்படும். Section 29 of BIS Act, 2016இல் கூறப்பட்டுள்ளபடி, பொருளின் மதிப்பைப் போல பத்து மடங்கு அல்லது பிஸ் Standard Mark ( Including Hallmark ) முத்திரையிடப்பட்ட தயாரிக்கப்பட்ட / விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020-ஐ மீறும் சம்பவங்கள் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், BIS தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகார்கள் செய்யப்படலாம். அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவலுக்கு, BIS SRO சென்னை அலுவலகத்தை தொலைபேசி எண்: 044-2254 1220 இல் தொடர்பு கொள்ளவும். BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் eBIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவக்கூடும்'' எனத் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago