சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் தொடரும் மழை

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த சில நாட்களாக பனிப்பொழி குறைந்து வந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகாலையில் பனிப்பொழி குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது. குறிப்பாக தண்டையார் பேட்டை, ராயபுரம், பாரிமுனை, அண்ணா சாலை, சேப்பாக்கம், வள்ளூவர் கோட்டம், கோடம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, அடையாறு உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் மிதமான வேகத்தில் இயக்கி வருகின்றன. திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், அடியக்கமங்கலம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்