மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெறிச்சோடிய சாலைகள்: முழு ஊரடங்கால் வீடுகளில் முடங்கிய மக்கள்

By செய்திப்பிரிவு

2-வது வாரமாக நேற்று அமலான முழு ஊரடங்கால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

கரோனா தடுப்பு நடவடிக்கை யாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல் படுத்தியது. 2-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.

இதனால் மதுரையில் பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களும், அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடின. மக்கள் வீடுகளி லேயே முடங்கினர்.

மருந்துக் கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. நகர் பகுதி யில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர கண்காணிப் பிலும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கும் செல்பவர்கள் மட்டுமே அனு மதிக்கப்பட்டனர்.தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டி ருந்தன. உணவு விடுதிகளில் பார்சல் வழங்க அனுமதிக்கப் பட்டது. தேவையின்றி சாலையில் சுற்றிய நபர்களை போலீஸார் எச்சரித்தனர்.

மாவட்டம் முழுவதும் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

விருதுநகர்

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி யில் 450-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து இல்லாமல் சாலை கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் மட்டும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.பேருந்து நிலையங்கள், சந்தை, பஜார் போன்ற இடங்களில் போலீ ஸார் ரோந்து சென்றனர்.

இதேபோல், சிவகங்கை, ராம நாதபுரம், தேனி ஆகிய மாவட்டங் களிலும் முழு ஊரடங்கால் பேருந்து நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE