ராணிப்பேட்டை மாவட்டத்தில் வார விடுப்பினால் காவலர்கள் மகிழ்ச்சி: எஸ்.பி., டாக்டர் தீபாசத்யன் தகவல்

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கப்பட்டுள்ளதால் காவ லர்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிந்து வருவதாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர் தீபாசத்யன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் 18 சட்டம்-ஒழுங்கு காவல் நிலை யங்கள், 2 மகளிர் காவல் நிலையங்கள், 2 போக்குவரத்து காவல் நிலையங்கள், மதுவிலக்கு தடுப்புப்பிரிவு 2 என மொத்தம் 24 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயுதப்படை காவல் துறையுடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும் 734 காவலர்கள் பணி யாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு காவல் அதிகாரியும், காவலர்களும் தங்களது உடல் நலனை பேணிக்காத்திடவும், அவர்களது குடும்பத்தாருடன் போதிய நேரத்தை ஒதுக்கிட ஏதுவாக முதல் நிலை காவலர்கள் மற்றும் 2-ம் நிலை காவலர்கள் வரை வாரத்தில் ஒரு நாள் வாரவிடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 60 முதல் 80 காவலர்கள் வரை வார விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களது உடல் நலனை பாதுகாக்கவும், குடும்பத்தினருடன் போதிய நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இதன் மூலம் தங்களது பணி களை காவலர்கள் சிறப்புடனும், மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்’’. என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்