தமிழக ஊரடங்கால் புதுச்சேரியில் காணும் பொங்கலில் களையிழந்த சுற்றுலா தலங்கள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழக ஊரடங்கால் புதுச்சேரியில் காணும் பொங்கலில் வழக்கமாக மக்கள் கூடும் சுற்றுலா தலங்கள் களையிழந்தன.

புதுச்சேரியில் எப்போதும் காணும் பொங்கல் சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். கரோனா காலத்தினால் அவை அனைத்தும் மாறிவிட்டன. புதுச்சேரிக்கு காணும் பொங்கலன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அதிகளவில் வருவார்கள்.

காணும் பொங்கல் நாளில் மணக்குள விநாயகர்ஆலயம், அன்னை ஆசிரமம், கடற்கரைச் சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் நிரம்பி வழியும்.

ஆனால் இம்முறை கரோனா பரவலால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் வர முடியவில்லை.

இதனால் வழக்கமாக காணும் பொங்கலால் களைக்கட்டும் சுற்றுலாத்தலங்கள் முற்றிலும் களை இழந்தன.

பாரதி பூங்காவில் சிறார்களும், உள்ளூர் மக்கள் மட்டும் குறைந்த அளவில் வந்திருந்தனர். கடற்கரைச்சாலை அதிகளவில் வெறிசோடியது. படகு இல்லத்திலும் குறைந்தளவே மக்கள் வந்தனர். வாகனங்கள் எல்லைப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டதால் காணும் பொங்கல் இம்முறை களையிழந்தது.

புதுச்சேரி- தமிழக எல்லைகளில் இரு மாநில போலீஸா சோதனை- வெறிசோடிய நெடுஞ்சாலைகள்

தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி-கடலூர் எல்லையான முள்ளோடை, புதுச்சேரி-விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு, புதுச்சேரி- மரக்காணம் எல்லையான காலாப்பட்டு, புதுச்சேரி- திண்டிவனம் எல்லையான கோரிமேடு என அனைத்து எல்லைகளிலும் இரு மாநில போலீஸாரும் வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார்கள்.

இதில் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீஸார் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது காரணமாகவும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி- தமிழக எல்லைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் நெடுஞ்சாலைகளும் வெறிசோடின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்