கடலூர் மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் அடையுமா என பெற்றோர்கள், கல்வியா ளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 129 அரசு மேநிலைப் பள்ளிகள், 130 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 275 ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்,913 அரசு(ஒன்றிய) தொடக்கப்பள்ளிகள், 282, அரசு உதவி பெறும் பள்ளிகள், 503 தனியார் பள்ளிகள் உட்பட 2,219 பள்ளிகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
அதிக கிராமங்களை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் தனிப் பயிற்சிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பொருளாதாரம் கைக்கொடுக்கவில்லை. இதனால் அரசுப்பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து குறைவாகவேஇருந்து வருகிறது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் படிப் பைத் தொடர்வதை கைவிடுகின்றனர். கரோனா பரவலால் பள்ளிகள் நடைபெறாததால் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் கடலூர் மாவட்டம் தொடர்ந்து பின்னடைவையே அடைந்துவருகிறது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், "கடலூர், விருத்தாசலம் என இரண்டுகல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டமாக கடலூர் மாவட்டம்இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாகக் காரணங்க ளுக்காக சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. நான்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பெரும்பாலான மாதங்கள் இந்த நான்கு கல்வி மாவட்டங்களில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களே மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பில் இருந்தனர். இதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப் பட்டாலும் அவர்கள் இக்கல்வி மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் பணிமாறுதல்களில் செல்லும் நிலையே தொடர்கதையாக இருந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பூபதி நியமிக்கப்பட்டார். இம்மாதத் தொடக்கத்தில் கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்த பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் கடலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டத்திற்கும் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமனம்செய்துள்ளார். அதன்படி கடலூர் கல்விகல்வி மாவட்டத்திற்கு கௌசர், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்திற்கு சுகப்ரியா, வடலூர் கல்வி மாவட்டத்திற்கு கார்த்தி கேயன், சிதம்பரம் கல்வி மாவட்டத்திற்கு சவுந்திரராஜன் ஆகியோர் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களாக பணியேற்க உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி தலைமையில் இந்த நான்கு புதிய மாவட்டக் கல்வி அலுவலர்களும் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ள கடலூர் மாவட்டத்தை முன்னேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்களும், கல்வியாளர்களும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago