கல்வி ஆண்டை நிறைவு செய்யாத மாணவர்கள் பட்டப்படிப்பு தகுதி பெற கூடுதல் வாய்ப்பு: புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்குநகரத்தின் கீழ் பட்டப்படிப்பை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச காலத்தைக் கடந்தவர்கள் எம்பிஏ மற்றும் முதுகலை மாணவர்கள் பட்டப்படிப்பு தகுதி பெறுவதற்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் இன்று (ஜன.15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதிலும் இருந்து வரும் மாணவர்களின் பல கோரிக்கைகள் காரணமாக, தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் பட்டப்படிப்பை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் காலத்தை முடித்த எம்பிஏ மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குருமீத்சிங் வழங்கியுள்ளார்.

2005-06ஆம் கல்வியாண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அனைத்து எம்பிஏ மாணவர்களும், 2014-15 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான எம்.காம், எம்.ஏ (ஆங்கிலம் , சமூகவியல், இந்தி) மாணவர்களும், பாடத்திட்டத்தை முடிப்பதற்கு அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட காலத்தைக் கடந்தவர்கள் இம்மாதம் (ஜன.2022) படிப்பை முடிப்பதற்கும், தங்களை மீண்டும் பதிவு செய்துகொண்டு பட்டப்படிப்புக்குத் தகுதி பெறுவதற்கும் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2005-06 முதல் 2016 காலாண்டு எம்பிஏ மாணவர்கள் https://dde.pondiuni.edu.in/-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி சமமான தாளை எழுத வேண்டும். மறுபதிவுக் கட்டணமாக ரூ.5,000 செலுத்தி மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்வுகளுக்குத் பதிவு செய்துகொண்டு ஆன்லைன் தேர்வுக்குத் தோன்றலாம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் உடனடியாகத் தங்களை மறுபதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 2022 அமர்வுத் தேர்வுகளுக்கான மறுபதிவுக் கட்டணம் மற்றும் தேர்வு விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி வரும் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://dde.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்