கோபி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு: செங்கோட்டையனை எதிர்த்து ஈவிகேஎஸ்?- கட்சி நிர்வாகிகள் எதிர்பார்ப்பு

By எஸ்.கோவிந்தராஜ்

கோபி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் கோபி தொகுதி காங்கிரஸுக்கு கிடைத் துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஏற்கெனவே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி கோபி மக்களவை தொகு தியாகும். இளங்கோவனின் வீடும் கோபியில் உள்ள நிலையில், கோபி தொகுதியில் அவர் போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி ஏற் கெனவே கட்சி பிரமுகர்கள் விருப்பமனு அளித்துள்ளனர்.

கோபியில் இளங்கோவன் போட்டியிடுவாரா என்பது குறித்து மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, ‘கோபி மக்களவை தொகுதி இருந்தபோது அதில் போட்டியிட்டு இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோபி சட்டப்பேரவை தொகுதி அடங்கிய திருப்பூர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கோபி தொகுதியில் அவரது சொந்த செல் வாக்கு காரணமாக கணிசமான வாக்குகள் கிடைத்தன. இப்போது கோபியில் அவர் போட்டியிட வேண் டுமென விருப்ப மனுக்கள் அளிக்கப் பட்டு இருந்தாலும், ஈ.வி.கே.எஸ். இங்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை’ என்றார்.

கோபி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளராக அதிமுக சார்பில் செங்கோட்டையன் மீண் டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்கொள்ளும் வகையில் இளங்கோவன் போட்டியிட வேண் டும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியின ரிடையே உள்ளது. தேர்தல் பிரச்சார பணிகளை முன் நிறுத்தி இளங் கோவன் போட்டியிடாவிட்டாலும், அவரது மகன் திருமகன் ஈவேரா இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டபோது, ‘திருமகன் ஈவேரா இங்கு போட்டியிடுவதாக இருந்தால், அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கி இருக்கும்’ என்றனர்.

ஏற்கெனவே கோபி தொகுதி யில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களில் மாவட்ட தலைவர் சரவணன், முத்துக்குமார், மாநில பொதுச்செயலாளர் கள்ளிப்பட்டி பாலு, மாநில துணை தலைவர் நல்லுசாமி, சித்ரா விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்