மதுரை: எய்ம்ஸ் செங்கலை வைத்து விளம்பரம் தேடியவர்கள், ஆட்சிக்கு வந்து ஒரு செங்கலைக் கூட நடவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கித் தந்த பெருமை அதிமுகவையும், அதனைச் சார்ந்த முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரைத்தான் சாரும்.
இந்தியாவில் 360 மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் மலைப்பிரதேசங்களில் இமாச்சல பிரதேசங்களில் மட்டும்தான் மருத்துவக்கல்லூரி இருந்தது. தற்போது நீலகிரி மாவட்டத்திற்கும் கேட்டுப் பெற்று மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்டத்தையும் அதிமுக அரசே பெற்றுத் தந்துள்ளது. அதன் மூலம் மூலம் ஆண்டுதோறும் 430 அரசு பள்ளி மாணவர்கள்கள் பயன் பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இருந்த தடையை நீக்கி அதைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அதிமுக அரசே சட்டம் இயற்றியது.
ஆன்லைன் பதிவால் தகுதி உள்ள வீரர்கள், மாடுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது
எய்ம்ஸ் மருத்துவமனையைக் குறிப்பிட்டு செங்கல் வைத்து விளம்பரம் தேடிய திமுக அரசு, ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை ‘‘ என்று தெரிவித்தார
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago