பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

இதற்கான எமிஸ் இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 31-ல் தொடங்கி, ஜன.10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.ஆனால், கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதை சரிசெய்யும் பொருட்டு கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்செய்து,திருத்தப்பட்ட காலஅட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், "ஆசிரியர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான காலஅவகாசம் இன்று (ஜனவரி 12)வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜன. 19 வெளியிடப்படும். அதில் திருத்தம் இருப்பின், இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜன. 22-ல் வெளியிடப்படும்.

அதன்பின், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல்பிப்ரவரி 23-ம் தேதி வரை நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்