சென்னை: தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கடந்த வாரத்திலிருந்து இரவு ஊரடங்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டன. நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வரும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசித் திட்டத்தை (Precaution Dose) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், தமிழகத்தை கரோனா தொற்று பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டு, மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்திட மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது மாநிலத்தில் இதுவரை மொத்தம் 8.83 கோடி கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 17 மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 3 கோடி 15 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த 3.1.2022 அன்று 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் தொடங்கி வைத்து, அதில் 33,46,000 பயனாளிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், இதுவரை 21,52,755 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தமிழக அரசால் சிறப்புக் கவனம் அளித்து கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
» ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்: அமைச்சர் மூர்த்தி
» பெரியார் சிலையை அவமதிப்பவர்களைத் தண்டிப்பதில் மெத்தனம் வேண்டாம்: முதல்வருக்கு கி.வீரமணி வேண்டுகோள்
20 லட்சம்பேர் இலக்கு: சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை (Precaution Dose) கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழக சுமார் 5,65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9,78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20,83,800 நபர்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2,06,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட 1,01,069 இணை நோய் உள்ளவர்கள், என மொத்தம் 4,00,013 பேர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை (Precaution Dose) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10.1.2022) சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர் பி. செந்தில் குமார், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் ச. உமா, இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ்.குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago