சென்னை: சென்னையில் புறநகர் ரயில்களில் பயணிக்க இன்று முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரும் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கரோனா மூன்றாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன்படி, வழக்கமான பயணிகளைப் போல் சீசன் டிக்கெட் எடுத்துப் புறநகர் ரயில்களில் பயணிப்போரும் இன்று முதல் தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும். புறநகர் ரயில்களில் பயணிக்கும் சாதாரணப் பயணிகளின் டிக்கெட்டில் கோவிட் தடுப்பூசி சான்றிதழலில் உள்ள 12 இலக்கு எண் அச்சிடப்படும், அதேபோல் சீசன் டிக்கெட் எடுப்போரின் டிக்கெட்டில் 4 இலக்கு கோவிட் சான்றிதழ் எண் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் போது அதே எண் மீண்டும் அச்சிடப்படும். இதன் நிமித்தமாக ரயில்வே நிர்வாகத்துக்கு சென்னை புறநகர்ப் பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago