சென்னையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்: டிடிவி தினகரன்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்திள்ளார்.

தமிழகத்தில் நேற்று 10,978 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் சென்னையில் மட்டும் 5,098 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டம் வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்ப் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்