சென்னை: தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜன.4-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று 10 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. தமிழகம் முழுவதும் 10,978 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 5,098 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago