உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினருக்கு நாளை நேர்காணல் : அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

By செய்திப்பிரிவு

திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளி யிட்டுள்ள அறிக்கை:

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு ஜன.10 (நாளை) அன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே வி.என்.நகரி லுள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இதன்படி மாலை 5 முதல் 5.30 மணி வரை துவாக்குடி, 5.30 முதல் 6 மணி வரை பொன்னம்பட்டி, 6 முதல் 6.30 மணி வரை கூத்தைப்பார், 6.30 முதல் இரவு 7 மணி வரை மணப்பாறை நகரம், 7 மணி முதல் 7.15 மணி வரை மலைக்கோட்டை பகுதி, 7.15 முதல் 7.30 மணி வரை மார்க்கெட் பகுதி, 7.30 மணி முதல் 7.45 மணி வரை பாலக்கரை பகுதி, 7.45 மணி முதல் 8 மணி வரை கே.கே.நகர் பகுதி, 8 மணி முதல் 8.15 மணி வரை பொன்மலை பகுதி, 8.15 முதல் 8.30 மணி வரை காட்டூர் பகுதிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. நேரில் வராதவர்களின் மனு நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்