மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது

By செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் டிசம்பர் 26-ம் தேதி தெப்பக்குளத்தில் நடப்பட்டது.

இந்நிலையில் கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு எழுந்தருளிய மீனாட்சி யம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்புப்பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கலந்துகொண்டார். ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடந்தது.

தைப்பூச நாளான ஜனவரி 18-ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையை பொருத்தே விழா கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE