நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளை ரத்து செய்யக்கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த முதுநிலை பொறியியல் படிப்புகள் நிறுத்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்திருப்பது கவலையளிக்கிறது. இது உயர்கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் செயலாகும்.

நெல்லை வளாகத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதால்தான் இந்த முடிவை எடுத்ததாக அண்ணா பல்கலைக்கழகம் கூறுவதை ஏற்க முடியாது. மாணவர் சேர்க்கை இல்லாததைக் காட்டி பள்ளிகளையே மூடக்கூடாது என வலியுறுத்தப்படும் சூழலில் பல்கலை. படிப்புகளை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? மாணவர் சேர்க்கை குறையும் பட்சத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமளிக்கும் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக, இருக்கும் படிப்புகளை நிறுத்துவது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகு அல்ல.

நெல்லை வளாகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தப்பட்டால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிக்க சென்னை அல்லது கோவைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவிர்க்க நெல்லையில் முதுநிலை படிப்புகள் தொடர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்