அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூ ரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க் கரை ஆலையை திறக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

2019-20 மற்றும்‌ 2020-21 ஆகிய ஆண்டுகளில் கரும்புப்‌ பதிவு குறைவாக இருந்ததால்‌ அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும் பல்வேறு காலகட் டங்களில்‌ ரூ.22 கோடியே 16 லட்சம்‌ நிலுவைத்‌ தொகை வழங்கப்பட்டது. ஆலை ஊழி யர்களின் நிலுவை ஊதியம்‌ உள்ளிட்ட அத்தியாவசிய செல வினங்களுக்காக‌ ரூ.17 கோடியே 16 லட்சம்‌ வழங்கப்பட்டது.

தற்போது 60,000 டன்‌ பதிவு செய்யப்பட்ட கரும்புகளும்‌, 17,000 டன்‌ பதிவு செய்யப்படாத கரும்புகளும்‌ அரவைக்குத் தயாராக உள்ளன. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அரவைக்கு முன்பான சுத்திகரிப்புப்‌ பணிகள் முழுமை அடையாமல் உள்ளன.

அதேபோல ஆலையின்‌ பராமரிப்புச்‌ செலவு, கரும்பு வெட்டுவதற்கு முன்பணம்‌ ஆகிய வற்றுக்காக ரூ.10 கோடியும், ஊழியர்களின்‌ ஊதியத்துக்கு ரூ.11 கோடியே 16 லட்சமும் தேவைப்படுவதாகவும்‌ தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலையை இயக்குவதன்‌ மூலம்‌ 10,000 கரும்பு விவசாயிகளும்‌, 500 தொழிலாளர்களும்‌ நேரடி யாகப் பயன்‌ பெறுவார்கள், மேலும் கரும்பு கொண்டு செல்ல பயன்படும்‌ லாரி, டிராக்டர்‌, மாட்டு வண்டி ஓட்டுபவர்களும்‌, அதைச்‌ சார்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள்‌ என ஆயிரக்கணக்கானோர்‌ மறைமுக மாகவும்‌ பயன்‌ பெறுவார்கள்‌.

எனவே ஆலையை இயக்க அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்‌. கரும்பு விவசாயிகள்‌ மற்றும்‌ ஆலைத்‌ தொழிலாளர்களின் நலன் கருதி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைத் திறக்க முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE