பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது 17 வயது மகள் பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்துள்ளார். அவரது 6 மாத கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் 17 வயது மகள் தினமும் மினி பேருந்தில் பயணம் செய்தபோது, ஓட்டுநர் தங்கபாண்டியுடன் (44) பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்று, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 20 வாரங்களை தாண்டிய கருவாக இருப்பதால் அதை கலைக்க உயர் நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் மனுதாரர் நீதிமன்றம் வந்துள்ளார்.
கருவை கலைப்பதால் சிறுமியின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்ஸோ வழக்கின் விசா ரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் போலீஸார் 2 மாதங்களுக்குள் குற்றப் பத் திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago