நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு: வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப் பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 646 வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளனர். இங்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங் களை வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதில், மொத்த முள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவை யான வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கையுடன் 20% கூடுதல் ஒதுக்கீடாக கணக்கிட்டு 779 மின்னனு வாக்குப்பதிவு இயந் திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை ஒதுக்கீடு செய்ய வுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இதில், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, மேல் விஷாரம், ராணிப்பேட்டை, சோளிங்கர், வாலாஜாப்பேட்டை நகராட்சிகளுடன், அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, 496 வாக்குச்சாவடிகளில் 496 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் நகராட்சி, பேரூராட்சி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இதனை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

அப்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரியம் ரெஜினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE