'முதன்முதலில் வாக்குறுதி அளித்தது பாமக' - சட்டப்பேரவை நேரலைக்கு அன்புமணி வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி நேர நிகழ்வுகள் நேரடியாக வலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. அவை நடவடிக்கைகளை எந்த தணிக்கையும் இல்லாமல் மக்கள் நேரடியாக அறிந்து கொள்வது மக்களின் ஜனநாயக உரிமை என்ற வகையில் இதை பா.ம.க. வரவேற்கிறது.

சட்டப்பேரவை ஆண்டுக்கு 4 முறை மொத்தம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும்; அவை நடவடிக்கைகள் முழுமையாக நேரடியாக ஒளிபரப்பட வேண்டும் என்று முதன்முதலில் வாக்குறுதி அளித்ததும், வலியுறுத்தியதும் பாமகதான். அந்த வகையில் கேள்வி நேர நேரலை மகிழ்ச்சியளிக்கிறது.

பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யவும், அதற்காக தனித் தொலைக்காட்சி தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா அச்சம் விலகிய பிறகு பேரவையை ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்