சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலையை நேரலையை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்யம், அந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் இடம்பெறச் செய்யலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது.
நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இரண்டாவது நாளான இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் நடக்கும் கேள்வி - நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல்ஹாசனை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் இன்று தனது ட்விட்டர் பதிவில், 'மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும்’ என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago