தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: எவற்றுக்கெல்லாம் அனுமதி, தடை? - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி விவரம்:

எவற்றுக்கெல்லாம் அனுமதி? - * பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி செலுத்தப்பட்டு 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி.

* அத்தியாவசியப் பணிகளான பால், செய்தித்தாள் விநியோகம், மருத்துவம் சார்ந்த பணிகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதி.

* பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரம் செயல்பட அனுமதி.

* உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பச் சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. என்றாலும், இரவு பணிக்குச் செல்பவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் அரசு அறிவுரை செய்துள்ளது.

* விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி. ஆனால் பயணிக்கும்போது, பயணச்சீட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போதும் செயல்பாட்டில் இருக்கும்.

* அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

* ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பால், செய்தித்தாள் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

* 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதி.

* அதேபோல் உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதி.

* இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி.

* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி.

* கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

* அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

* திறந்த வெளி விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி

* அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

எவற்றுக்கெல்லாம் தடை:

* நாளை முதல் மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட தடை.

* அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை.

* பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை

* பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்த தடை.

* அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் நடத்த தடை.

* அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை.

* அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் செயல்பட தடை.

* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்