'26,540 பேர் கூடுதல்' - சென்னையின் 16 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி இன்று (05.01.2022) ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2022-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 01-11-2021 அன்று வெளியிடப்பட்டன.

01.01.2022 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 01.11.2021 முதல் 30.11.2021 முடிய பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.

ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2022-ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்களுடனான இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துணைப் பட்டியல்களுடனான இறுதிப்பட்டியல் இன்று (05.01.2022) வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மண்டல அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.

கடந்த 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்; சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம். ஆண்கள் 19,92,198 , பெண்கள், 20,60,767 இதரர் 1,073 - மொத்தம் 40,54,038 பேர்.

2022-ம் ஆண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக 31,378 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன்படி, ஆண்கள் 15,006, பெண்கள் 16,340, இதரர் 32 என மொத்தம் 31,378 மேற்படி பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு துணைப் பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களது எண்ணிக்கை 31,181

அதன்படி, ஆண்கள் 14,918, பெண்கள் 16,231, இதரர் 32, மொத்தம் 31,181. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது களஆய்வின் போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்ய கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 4,725 ஆகும். அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்கு பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,641 ஆகும். மேலும், எந்த பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக (SUO-MOTU) நீக்கம் செய்யப்படவில்லை.

மேலும், இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து உரிய நடைமுறையை பின்பற்றி இறந்து போன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பலமுறை பட்டியலில் பதிவுகள் (Repeated). மேற்குறிப்பிட்ட 30,156 நீக்கம் செய்யப்பட்ட பெயர்களில் 2,580 இறந்தவர்கள், 21,255 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் 6,321 பலமுறை பட்டியலில் பதிவு (Repeated).

இன்று வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்கு பின்னர் சென்னை மாவட்டத்தில் அமையப்பெற்ற 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்களது எண்ணிக்கை:
ஆண்கள் 20,04,860, பெண்கள் 20,74,616, இதரர் 1,102, மொத்தம் 40,80,578 பேர் உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி திருத்தப்பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை, கடந்த 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களது எண்ணிக்கையினை விட 26,540 பேர் கூடுதல் என்றும், இந்த எண்ணிக்கை வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களை விட கூடுதலாக 0.65 சதவீதம் உள்ளது.

இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 43,132. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக எண் 18. துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,78,665 வாக்காளர்களும், அதிகபட்சமாக எண் 26. வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,17,349 வாக்காளர்களும் உள்ளனர்' என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்