ரேபீஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை எடுத்துச் செல்ல மாநகராட்சியில் தனி வாகனம் இல்லாததால், சுகாதாரத் திட்டத்தின் இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸில் எடுத்துச்செல்கின்றனர். அதனால், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நோய் கிருமி பரவாமல் தடுக்க தற்காப்புக்காக நாய்க்கடி ஊசி போட்டுக்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கடந்த காலங்களில் ஏழை நோயாளி கள் இறந்தால் அவர்கள் உடல்களை வீட்டுக்கு கொண்டுசெல்ல தனியார் அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதையடுத்து, அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு இறப்பவர்கள், விபத்துகளில் உயிரிழப்போர் உடல்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் திட்டம் 2011-ம் ஆண்டு செயல் படுத்தப்பட்டது.
இதை தமிழ்நாடு அரசு சுகாதாரத்திட்டம், செஞ்சி லுவை சங்கம் இணைந்து செயல்படுத்துகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்து மனைகளில் 160 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 500 டிரைவர்கள் பணிபுரிகின்றனர். மதுரையில் 9 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவர்களுக்கு ரூ.7,800 முதல் ரூ. 11,400 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் இறக்கும் சாதாரண நோயாளிகள் மட்டுமில்லாது காசநோய், எய்ட்ஸ், டெங்கு, பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்கள் உடல்களையும் அவர்கள் வீட்டுக்கு இவர்கள் எடுத்துச் செல்கின்றனர். தற்போது ரேபீஸ் நோயால் இறந்த வர்கள் உடல்களையும் எடுத்துச் செல்ல இவர்களை மருத்துவ மனை நிர்வாகம் கட்டாயப்படுத்து வதாகவும், அதனால், அவர் களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற் பட்டுள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணிபுரிகிறோம். 2 முதல் 5 உடல்களை அதிகபட்சம் 100 கி.மீ. தூரம் வரை எடுத்துச் செல்கிறோம். அப்போது டீ அருந்த, சாப்பிட ஹோட்டல்கள், டீக்கடைகள் அருகே ஆம்புலன்ஸ்களை நிறுத்த முடியவில்லை. அவர்கள் விரட்டி யடிக்கின்றனர். இப்படி பல அவ மானங்களை சந்திக்க வேண்டி யுள்ளது. நாய்க்கடியால் இறக்கும் ரேபீஸ் நோய் மிக மோசமானது என்பதால் அவர்கள் உடல் எரிக் கப்படும். கிருமி தாக்கும் என்பதால் அவர்கள் உடல்களை எடுத்துச் செல்ல தமிழகம் முழுவதும் மாநக ராட்சிகளில் தனி வாகனம் இருக்கும். ஆனால், மதுரையில் மட்டும் அரசு மருத்துவமனையில் ரேபீஸ் நோயால் இறப்பவர்கள் உடல்களை இந்த இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்துகின்றனர். எங்களுக்கு ரேபீஸ் நோய் பரவா மல் இருக்க நாய் கடிக்கா மலே நாய்க்கடி ஊசி போட்டுக் கொள்கிறோம்.
இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வதால் ஆண்டுக்கு ஒரு முறை எங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், பணிக்கு சேர்ந்து இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர் என்றனர்.
இதுகுறித்து இலவச அமரர் ஊர்தி ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரி கூறியது: ரேபீஸ் நோயால் இறப்பவர் உடலை மாநகராட்சி வாகனம்தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், பாதுகாப்பாக எடுத்துச் சென்றால் எந்த பாதிப்பும் டிரைவர்களுக்கு ஏற்படாது என்றனர்.
மருத்துவமனைகளே வீடானது
அமரர் ஊர்தி டிரைவர்கள் மேலும் கூறியதாவது: இலவச அமரர் ஊர்திகளில் பணிபுரியும் எங்களுக்கு அரசு ஊழியர்களைப்போல் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தற்போது இருக்கும் விலைவாசி உயர்வில் இந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை.
எங்களில் பல டிரைவர்களை சொந்த மாவட்டங்களில் பணி நியமிக்காமல், மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்துள்ளனர். இந்த ஊதியத்தில் வெளியே அறை எடுத்து தங்க முடியாது என்பதால் மருத்துவமனையில் பிரேத அறைகள் அருகே இருக்கும் பாழடைந்த கட்டிடங்களை வீடுகளாக்கி வசிக்கிறோம். எங்கள் மீது கருணை காட்டி, போதுமான ஊதியம், வேறு மாவட்டங்களில் பணிபுரிவோரை சொந்த மாவட்டங்களுக்கும் மாற்ற வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago