சென்னை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ஸ்டாலின் இன்று (3.1.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 உதவி இயக்குநர்கள் மற்றும் 7 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
குழந்தைகள், மகளிர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்துறையின் சமூகநலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவில் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களும், வட்டார அளவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள் மற்றும் 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago