சென்னை: ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 -5 நாட்களில் தொற்று சரியாகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியன் பேசும்போது, “ ஒமைக்ரானால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 24 மணி நேரத்தில் இரண்டுமுறை டெஸ்ட் எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 121 பேரில் தற்போது 23 மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 -5 நாட்களில் தொற்று சரியாகிறது
தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
» இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: முக்கிய வீரர் தொடரிலிருந்தே விலகல்
இதுவரை, தமிழகத்தில் 87% பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 60.71% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 1,594 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,51,128. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,64,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,05,034.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago