மதுரைக்கு பல திட்டங்கள் வந்ததில் வர்த்தக சங்கத்துக்கு முக்கிய பங்கு: பேராசிரியர் சாலமன் பாப்பையா பெருமிதம்

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 98-வது ஆண்டின் மூன்றா வது செயற்குழுக் கூட்டம் மதுரை பாண்டியன் பார்ச்சூன் ஹோட்டலில் நடந்தது. சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் தலைமை வகித்தார். மதுரை சரக டிஐஜி காமினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பேராசிரியர் சாலமன் பாப்பையா கவுரவிக்கப்பட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங் கம் மதுரைக்கு பெருமை தேடித் தந்துள்ளது. மதுரைக்கு விமான நிலை யம் கொண்டு வந்த முயற்சியில் அதற்கும் பங்கு உண்டு. மதுரை மல்லிகையை ஏற்றுமதி செய்ய இச்சங்கம் முயற்சி எடுத்துள்ளது.

உயர் நீதிமன்றக் கிளை, எய்ம்ஸ் போன்ற மதுரைக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததிலும், வர்த்தக சங்கத்தின் பங்கு இருக்கிறது. இச்சங்கம் எந்நாளும் நிலைத்து, வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முதுநிலை தலைவர் ரத்தினவேல், டிவிஎஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.ஹரேஷ், வர்த்தக சங்கச் செயலர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE