சென்னை: "சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் 6 முதல் 7 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடும்" என்று மாநகராட்சி ஆணையர் ககன் சிங் தீப் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். பல்வேறு சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய மாநகரப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தேங்கிய மழை நீர் வெளியேற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “சென்னையில் நேற்று பெய்த தொடர் மழையால் 156 இடங்களில் மழை தண்னீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதலே மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் பிரதான சாலைகளில் தேங்கிய மழை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. அவையும் 6 - 7 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடும். கடந்த முறைபோல் இருக்காது” என்று தெரிவித்தார்.
» பேரிடரைக் கடந்து யாவரும் நலன்பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
» கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்; ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு
இதனிடையே, இன்றும் சென்னையில் கனமழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான அப்டேட் > சென்னையில் மீண்டும் கனமழை தொடங்கியது; நாளைக்கும் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago