சென்னை தியாகராய நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், 200-வது அசித்ர பாராயணம் நேற்று நடைபெற்றது.
சென்னை தியாகராய நகர்,ஹபிபுல்லா சாலையில் உள்ள சுதர்சன மையத்தில், வேத வித்வான் மான் குறிச்சி, கிடாம்பி, ஆத்ரேயலட்சுமி நரசிம்மன் சுவாமியின் சீரிய முயற்சியால், வேத வித்யார்த்திகள் உருவாகி வருகின்றனர்.
முன்னதாக, இவர், தி.நகர், சிஐடி நகர், கிண்டி, அடையாறு, வேளச்சேரி, மடிப்பாக்கம், அசோக்நகர் என்று பல பகுதிகளில்மாணவர்களின் இருப்பிடத்துக்கேசென்று மாணவர்களுக்கு வேதம்பயிற்றுவித்து வந்தார். மேலும்அசித்ரம் எனப்படும் உயர்ந்த வேதபாடத்தை தனிகவனம் செலுத்தி பயிற்றுவித்தார்.
அசித்ரத்தில் பல வாழ்வியல் நிகழ்வுகள் கூறப்பட்டு அவற்றை கடைபிடிப்பதில் ஏற்படும் நடைமுறை குறைபாடுகளுக்கு பிராயச்சித்தங்கள் கூறப்பட்டுள்ளன. அசித்ர மந்திரங்களை ஏகாதசி தினத்தில் பாராயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும்.
அகோபில மடத்தின் 45-வது பட்டம் மத் அழகிய சிங்கர் நாராயண யதீந்த்ர மகா தேசிகன் சுவாமிகளின் விருப்பத்தின்படி, 2013-ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி முதல், தி.நகர் சுதர்சன மையத்தில், ஒவ்வொரு ஏகாதசி தினத்திலும் அசித்ர பாராயணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று, 200-வது ஏகாதசி அசித்ர பாராயணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ‘வேத மகிமை’ என்ற தலைப்பில் உ.வே. லட்சுமி நரசிம்மாசாரியாரின் (ரகு சுவாமி) ஜூம் இணையவழி பிரவசனம் நடைபெற்றது.
மேலும் 201-வது அசித்ர பாராயணம் வரும் ஜன.13-ம் தேதி நடைபெறும். அன்றைய தினத்தில் பி.சுந்தரகுமார் சுவாமிகளின் பிரவசனம்நடைபெறும் என்று சுதர்சன மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago